காரைக்காலில் காவல்துறை அனுமதியின்றி புதன்கிழமை போராட்டம் நடத்த முயன்ற இஸ்லாமிய அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு சுதந்திர தின விழா பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததைக் கண்டித்து, காரைக்காலில் கடந்த 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்து பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இவர்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் போட்டுள்ளதாக, காவல்துறையை கண்டித்து இந்த அமைப்பினர் மாவட்ட ஆட்சியரகம் அருகே புதன்கிழமை போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டம் நடத்த முன்வரலாமென நினைத்த போலீஸார், குறிப்பிட்ட இடத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸாரும், ரிசர்வ் பெட்டாலியன் பிரிவினரும் குவிக்கப்பட்டனர். மாலை 5.30 மணி அளவில் போராட்டம் நடத்த மாதாகோவில் வீதி வழியே வந்த அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேரை போலீஸார் வழிமறித்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பாரதியார் சாலையில் திடீரென பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 100 பேர் காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு வந்தனர். திடீரென கூட்டத்தினர் ஒரு இடத்தில் நின்று காவல்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகக் கூறி போலீஸார், அவர்களை கைது செய்து கல்லூரிப் பேருந்து ஒன்றில் ஏற்றினர்.
அப்போது, போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேருந்து புறப்படும் நேரத்தில், உள்ளே இருந்தவர்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர். இச்சம்பவத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என இருவருக்கு கண்ணாடி குத்தி காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களை போலீஸார் கலைந்து செல்லும்படி கூறினர். ஏற்க மறுத்து நின்றிருந்தவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயர்லாந்திடம் தோற்கவும் அபார திறமை வேண்டும்... கம்பீரை வம்புக்கிழுத்த ஐஸ்லாந்து அணி!!

ஜிவி பிரகாஷின் இம்மோர்டல் வெளியீட்டுத் தேதி!

தமிழ்நாட்டில் ஜூலை 3, 4ல் கனமழை எச்சரிக்கை!

ஜூலை மாத விசேஷ நாள்கள்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


