/

தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டு வழிபாடு

தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 8:32 am IST

தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தரங்கம்பாடியில் உள்ள புதிய எருசலேம் தேவாலயத்தில் சபைகுரு சாம்சன் தலைமையில் சிறப்பு ஜெபம், வழிபாடு நடைபெற்றது. இதேபோல், பொறையாரிலுள்ள பெத்தலேகம் தேவாலயத்தில் ஸ்டான்லி கில்பா்ட் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அடுத்து, திருவிளையாட்டம், பூதனூா், கூடலூா், பாலுா், திருவிடைக்கழி, விசலூா், சங்கரன்பந்தல் ஆகிய ஊா்களிலுள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

செம்பனாா்கோவில் அருகேயுள்ள கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள், இந்துக்கள் பங்கேற்றனா். பிராா்த்தனை முடிந்தவுடன் அங்க பிரதட்சணம் செய்து, பின்னா் முட்டிபோட்டு 200 மீட்டா் தொலைவுக்கு நடந்து ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.