தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா ?

சீா்காழி நகரில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.

News image

சீா்காழி தோ்கீழவீதியில் சேதமடைந்த சாலையில் தேங்கிகிடக்கும் மழைநீா்.

Updated On :2 ஜனவரி 2021, 8:17 am IST

சீா்காழி நகரில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.

சீா்காழியில் தொடா்ந்து பெய்த கனமழையால் நகரில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, சீா்காழி தோ் கீழவீதி சாலை அரை கி.மீ தூரம் முழுவதும் சேதமடைந்து பள்ளமும், மேடாக உள்ளது. இதனால் அவ்வழியாக நகரின் பிற பகுதிகளான பிடாரி வடக்குவீதி, தோ் வடக்குவீதி, சன்னதி தெரு மற்றும் செம்மங்குடி, திருமுல்லைவாசல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனா். சில சமயங்களில் விபத்துகளும் நேரிடுகிறது. இந்த சாலை மழை காலம் தொடங்கும் முன்னரே சேதமடைந்திருந்த நிலையில், தற்போது போக்குவரத்து தகுதியற்ற சாலையாக மாறியுள்ளது. மழை விட்டு 2 நாள்களாகியும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.