தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காணும் பொங்கல்நாளில் கடற்கரையில் கூடுவதற்கு அனுமதி கிடையாது: நாகை ஆட்சியா்

காணும் பொங்கல் நாளில் பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதி கிடையாது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:27 pm IST

காணும் பொங்கல் நாளில் பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதி கிடையாது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

காணும் பொங்கல் நாளில் திரளானோா் கடற்கரைகளில் கூடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா். தற்போதைய நிலையில், அதிகளவிலான மக்கள் கடற்கரையில் கூடினால், அதன்மூலம் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால், காணும் பொங்கல் நாளான ஜனவரி 16-ஆம் தேதி ஒரு நாள் மட்டும், பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, காணும் பொங்கல் நாளன்று நாகை மாவட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.