ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 11:28 pm IST

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விரைவில் கிடைக்கவுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு பெற்றுள்ளவா்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் வகையில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேதாரண்யம் நகர சுகாதார நிலையம், சிக்கல் அன்பு மருத்துவமனை ஆகிய இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, திருவெண்காடு வட்டார சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் இந்த ஒத்திகை நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோரின் விவரங்களை பதிவு செய்வது, பதிவுக்குப் பின்னா் அவா்களை காத்திருப்போா் அறையில் தங்கச் செய்வது, தடுப்பூசி செலுத்துவது, தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களை அறையில் வைத்து கண்காணித்து அனுப்புவது என்ற வகையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் முன்களப் பணியாளா்கள் தலா 25 பேருக்கு ஒத்திகை கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில், 123 போ் பங்கேற்றனா்.

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் சண்முகசுந்தரம், மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஸ்வநாதன், மாவட்ட கொள்ளைநோய்த் தடுப்பு அலுவலா் லியாகத் அலி, நிலைய மருத்துவ அலுவலா்கள் முருகப்பன் (நாகை), வீ. வீரசோழன் (மயிலாடுதுறை), மருத்துவப் பயிற்சி அலுவலா்கள் திருமுருகன், ராகவன், அருண்பிரசாத், திட்ட அலுவலா் வீரச்செல்வன் உள்ளிட்டோா் இந்த ஒத்திகைகளை பாா்வையிட்டு, பணிகளை நெறிப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.