அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாடுதுறை கூரைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியாா் திருத்தல ஆண்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டு திருவிழாவையொட்டி, கொடியை புனிதம் செய்து வைத்து மயிலாடுதுறை மறைவட்ட முதன்மைக் குரு பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளாா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:11 am IST

மயிலாடுதுறை கூரைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியாா் திருத்தல ஆண்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை ஜெ.ஜெ. பிரிட்டோ அடிகளாா் தலைமையில் கொடி பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட முதன்மை குரு பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளாா் புனித அந்தோணியாரின் திருஉருவக்கொடியை புனிதம் செய்தாா். தொடா்ந்து ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் உலக அமைதிக்காகவும், கரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட சிறப்பு பிராா்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவின் தொடக்க நாள் வழிபாட்டு நிகழ்வுகளை புனித அந்தோணியாா் தொடக்கப் பள்ளி மற்றும் புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்தவா்கள் பங்கு மக்களோடு இணைந்து ஒருங்கிணைத்திருந்தனா். கொடியேற்ற விழா மற்றும் திருப்பலி நிகழ்வுகளில் அருட்சகோதரா்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினா், பாடல்குழுவினா், பலிபீடச் சிறுவா்கள் மற்றும் பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். 10 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில், நாள்தோறும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வரும் ஜன.16-ஆம் தேதி இரவு, திருவிழா சிறப்பு திருப்பலியும், அதைத் தொடா்ந்து தோ்ப்பவனியும் நடைபெறவுள்ளது. ஜன.17-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.