முதல்வர் விஜய் கரூருக்கு செல்வதில் திமுகவுக்கு ஏன் இவ்வளவு பயம்? என்று அமைச்சர் நிர்மல் குமார் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க தவெகவினருக்கு தடை விதிக்க வேண்டும், முதல்வர் விஜய் சாட்சியங்களை சந்திக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:
முதல்வர் கரூருக்கு சென்றால் திமுகவுக்கு ஏன் இவ்வளவு பயம் ஏற்படுகிறது? கரூர் மட்டுமல்லாமல் அனைத்து தொகுதிகளில் உள்ள எல்லா இடங்களுக்கும் செல்வதற்கு முதல்வருக்கு நூறு சதவிகிதம் உரிமை உண்டு.
ஆனால், அவர் கரூருக்கு செல்கிறார் என்ற உடனேயே திமுகவினர் ஏன் இவ்வளவு பயப்படுகின்றனர்? கரூர் என்பது தமிழகத்தின் ஒரு பகுதி அங்கு முதல்வர் செல்வதில் என்ன பிரச்னை? முதலில் இதை எதிர்த்து மனு தாக்கல் செய்ததே தவறு.
திமுகவின் வழக்குரைஞர் குழுவைப் பார்த்து, ”முதலில் வழக்கை எதற்காகப் பதிவு செய்கிறோம் என்பதை படித்து வாருங்கள்” என்று நீதிபதி சொல்லியிருக்கிறார்.
இப்படி ஒரு குழுவை வைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று, எல்லாருடைய நேரத்தையும் வீணடித்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை முறை இதுமாதிரி நீதிமன்றங்களின் நேரத்தை திமுகவினர் வீணடிக்கப் போகிறீர்கள்? என்று அமைச்சர் நிர்மல் குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Summary
Minister Nirmal Kumar questioned on Tuesday (July 7) why the DMK is so afraid of Chief Minister Vijay visiting Karur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 7 - நேரலை

பரந்தூர் விமான நிலையப் பணிகள் மீண்டும் தொடக்கமா? நிர்மல் குமார் விளக்கம்
அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை

கட்சியில் சேர்பவர்கள் மீதான வழக்குகள் நிறுத்தம்? அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




