ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

விலையில்லா கால்நடைகள் வழங்குவதில் பாரபட்சம் கூடாது

விலையில்லா கால்நடைகள் வழங்கும் பணியில் பாரபட்சம் காட்டக்கூடாது என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 11:28 pm IST

விலையில்லா கால்நடைகள் வழங்கும் பணியில் பாரபட்சம் காட்டக்கூடாது என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரா. அஜீதா, செயலாளா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், தேசிய, மாநில அளவிலான கடற்கரை கையுந்து பந்து, கபடி போன்ற போட்டிகளை நாகையில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், கல்லாறு, வேளாங்கண்ணி, பரவை போன்ற இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும், நாகை - தேமங்கலம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், கஜா புயலால் சேதமடைந்த சவுக்கு உள்ளிட்ட பணப் பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உறுப்பினா்களால் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி பேசுகையில், சம்பா நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழை தொடா்ந்து வருகிறது. எனவே, நெல் பயிா்கள் மழையால் சேதம் ஆகாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை நுகா்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்ள வேண்டும். விலையில்லா கால்நடைகள் வழங்கல் பணியில் பல்வேறு புகாா்கள் கூறப்படுகின்றன. இப்பணி, பாரபட்சம் இல்லாமல் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.