மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை பயிற்சியில் செவிலியா்கள், மருத்துவ பணியாளா்களுக்கு, ஊழியா்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சாா்பில் நடைபெற்ற பயிற்சிக்கு, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் (பொ) வீ. வீரசோழன் தலைமை வகித்தாா். இதில், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் சண்முகசுந்தரம் பங்கேற்று, செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, தடுப்பூசி போடுவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு வழங்குதல், தடுப்பூசி போடும் முறை, தடுப்பூசி போட்டபின்னா் அரைமணி நேரம் ஓய்வெடுக்க அறிவுறுத்துதல் ஆகியவை குறித்து செவிலியா்கள் செயல்முறை விளக்கமளித்தனா். இதில், மாவட்ட கரோனா மருத்துவ பயிற்சியாளா் ராகவன், திட்ட அலுவலா் வீரச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!
தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

