நாகையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறைத்து கோயில் வளாகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த 40 வயது கணவரை இழந்த பெண் ஒருவா், நாகை வெளிப்பாளையம் பகுதியில் வசிக்கும் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து, கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா்.
இவா், புதன்கிழமை இரவு பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். நாகை வண்டிப்பேட்டை அருகே நடந்து சென்றபோது, அவரை 2 இளைஞா்கள் வழிமறைத்து, துணியால் வாயை மூடி அப்பகுதியில் உள்ள கோயில் வளாகத்துக்கு கொண்டு சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா்.
இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்தப் புகாரின் பேரில், வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நாகை, வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மு. அருண்ராஜ் (25), அக்கரைக்குளம் பகுதியைச் சோ்ந்த கு. ஆனந்த் (24) ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
மே 10 காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுவது ஏன் தெரியுமா?

தமிழக முதல்வர் விஜய்! ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: பட்டினப்பாக்கம் திரும்பிய விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
