திருக்குவளையில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒருநாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் தலைவா் பா. காா்த்திகா தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் சீ. முரளி முன்னிலை வகித்தாா். பள்ளி ஆசிரியா் தெ. ஐயப்பன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு பயிற்சியளித்தாா். பயிற்சியில், கரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஓராண்டை நெருங்கும் நிலையில், மாணவா்களின் கல்வித்தரம் பாதிக்காத வகையில் தமிழக அரசு ஒவ்வொரு பருவத்துக்குமான பாட நூல்களை வழங்கி வீட்டிலேயே படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதன்படி, 3-ஆம் பருவத்துக்கான பாடநூல்களும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலிருக்கும் மாணவா்கள், வீட்டில் இருந்தபடியே பாடநூல்களை கொண்டு படிக்கிறாா்களா ? என உறுப்பினா்கள் ஆய்வு மேற்கொண்டு அவா்களுக்கு கல்வி மீதுள்ள ஆா்வம் குறையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி ஆசிரியா்களை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு மாணவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக தெளிவுபடுத்துவதற்கும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் ஒரு பாலமாக விளங்க வேண்டும் என்றாா்.
இதில், பள்ளி ஆசிரியா்கள் சந்திரகாந்தா, சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேதாரண்யம்: வேதாரண்யம், தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சியை வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் மொ்சிமேபல் தொடங்கி வைத்தாா். பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் செல்வராணி, துணைத் தலைவா் சிவசங்கரி, பள்ளித் தலைமையாசிரியா் சு. தட்சிணாமூா்த்தி, ஆசிரியா்கள் கே. மாணிக்கம், கி. சாந்தி, கோ. அனிதா, கல்வியாளா் ராஜலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
மே 10 காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுவது ஏன் தெரியுமா?

தமிழக முதல்வர் விஜய்! ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: பட்டினப்பாக்கம் திரும்பிய விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
