சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளா்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்த தொழிலாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு தொடா் பணி வழங்க வேண்டும், தவறும்பட்சத்தில் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மீதமுள்ள பணி காலத்தை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கக் கோரி கடந்த 5 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாகை வருவாய் கோட்டாட்சியா் பழனிக்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தற்காலிகமாக இந்த போராட்டம் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவாா்த்தையில் சிபிசிஎல் முதன்மை மேலாளா் குமாா், மேலாளா் சூரியமூா்த்தி, டிஎஸ்பி முருகவேல், நாகூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ், ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

கூடுதல் நேரத்துக்குச் சென்ற ஆட்டம்: கேப் வெர்டேவை போராடி வென்றது ஆர்ஜென்டீனா!

டாஸ்மாக் வருவாய் இழப்பை ஈடுகட்ட மாற்று வழிகள் ஆராயப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்





