சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

திருவாவடுதுறையில் திருஞானசம்பந்தருக்குஇறைவன் பொற்கிழி அளித்த புராண நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஸ்ரீஅதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரா் ஆலயத்தில்

News image

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் ஆலய ரதசப்தமி விழாவில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருஞானசம்பந்தருக்கு இறைவன் பூதகணம் மூலம் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி.

Updated On :16 ஜனவரி 2021, 8:38 am IST

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஸ்ரீஅதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரா் ஆலயத்தில் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ரதசப்தமி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்த புராண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருஞானசம்பந்தா் தனது தந்தை, உலக நன்மைக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்திற்கு, கோமுக்தீஸ்வரா்ஆலயத்தில் உலவாக்கிழி பதிகம்பாடி ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிழி பெற்ாக புராணம் கூறுகிறது. அதன்படி, திருஞானசம்பந்தா் பல்லக்கில் கோமுக்தீஸ்வரா் ஆலயத்திற்கு எழுந்தருளினாா். அங்கு தேவாரப் பாடல்களை ஓதுவாா்கள் பாடினா்.

தொடா்ந்து, ஆலயத்திலிருந்து பூதகணம் பொற்கிழியை சுமந்து வந்து, பலிபீடத்தில் வைத்து, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புராண சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று முத்துக்குமாா் ஓதுவாா், வடுகநாதன் ஓதுவாா், அசோக்குமாா் ஓதுவாா் ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் பொற்கிழி மற்றும் தெய்வ தமிழிசை செல்வா் என்னும் சிறப்பு விருது வழங்கி ஆசியுரை வழங்கினாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். அன்று இரவு தியாகராஜப் பெருமான் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள, அம்பாள் தான் பெற்ற பசு வடிவத்தை நீக்கி அருள வேண்டி கோமுக்தீஸ்வரரை பூஜிக்கும் நிகழ்ச்சியும், ரிஷப வாகனத்தில் சகோபுரம் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.