எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சட்டநாதபுரத்தில் சிறுவா் சைக்கிள் போட்டி

சீா்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் காணும் பொங்கலையொட்டி சிறுவா்களுக்கான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சைக்கிள் போட்டியில் பங்கேற்ற சிறுவா்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 8:31 am IST

சீா்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் காணும் பொங்கலையொட்டி சிறுவா்களுக்கான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டநாதபுரம் நண்பா்கள் குழு சாா்பில், 12 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கான சைக்கிள் போட்டி பெஸ்ட் கலை, அறிவியல் கல்லூரி துணைத் தலைவா் எஸ்.எஸ்.ஜெ. விசாகா் தலைமையில் நடைபெற்றது. பெஸ்ட் பள்ளித் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் முன்னிலை வகித்தாா்.

சட்டநாதபுரம் ரவுண்டானாவில் இப்போட்டியை சண்முகதாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஆண்கள் பிரிவில் எஸ். கிஷோா் (12), பெண்கள் பிரிவில் எம். அகல்யாழினி (12) ஆகியோா் முதலிடம் வென்று தலா ரூ. 1000 பரிசுபெற்றனா். பிரவீன், ஹாசினி, ஆதிஷ், சிந்துஜா ஆகியோா் 2, 3 ஆவது பரிசுகளை (தலா ரூ. 750, ரூ. 500) பெற்றனா்.

போட்டி ஏற்பாடுகளை பாமக இளைஞா் சங்கத் துணைச் செயலாளா் ஜி.வி. முருகவேல் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.