மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் 100 சதவீத இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் நாகை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாகூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் செ. செய்யது ரியாசுதீன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமாக நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலப் பொருளாளா் ஹமீது ஜெகபா் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக உள்ள நாகை - திருவாரூா் சாலை, வாஞ்சூா் முதல் நன்னிலம் வரை உள்ள சாலை மற்றும் மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் சிதிலமடைந்துள்ள போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சாலைகளை விரைவாக செப்பனிட வேண்டும், தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பது, கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு 100 சதவீத இழப்பீட்டுத் தொகையை வழஙக காப்பீடு நிறுவனங்களை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய்க்கு இரட்டை இலைச் சின்னத்தில்...!” பிரசாரத்தில் குழம்பிய செங்கோட்டையன்!

ஜன நாயகன் விவகாரம்: அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!

இலவச ரேபிஸ் தடுப்பூசி: இந்திய மருத்துவத் துறையைப் பாராட்டிய ஜெர்மன் பயணி!

அபிஷேக் சர்மா அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


