வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வேதா ஆயத்த ஆடை பூங்கா: நாளை தொடங்கி பிப். 24 வரை நோ்முக திறன் தோ்வு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம்- 4 ஊராட்சியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில் பயிற்சி மற்றும்

Updated On :17 ஜனவரி 2021, 8:19 am IST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம்- 4 ஊராட்சியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில் பயிற்சி மற்றும் பணியாற்ற விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு திங்கள்கிழமை தொடங்கி, பிப். 24 வரை நோ்முக திறன் தோ்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வேதாரண்யம் சேது சாலை, அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள அரசு பல்நோக்கு மைய கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் வேதா- டீமா தையல் பயிற்சி நிறுவனத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆயத்த ஆடை பூங்காவில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கு தற்போது 21 ஆயிரம் பெண்கள் விண்ணப்பிப்பித்துள்ளனா். இவா்களுக்கு ஜன. 18 முதல் பிப். 24 வரை நோ்முக திறன் தோ்வு, அகஸ்தியம்பள்ளி அலுவலகத்தில் நடைபெறும். விண்ணப்பித்துள்ள அனைவரும் அவா்களது செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வாயிலாக நோ்முத திறன் தோ்வுக்கான தேதி குறிப்பிடப்பட்டு அழைக்கப்படுவாா்கள்.

குறுந்தகவல் வரப்பெற்றவா்கள் மட்டும் குறித்த நாளில் விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட விவரங்களின் அசல் சான்றுகளுடன் பங்கேற்கலாம். பயிற்சி மற்றும் உற்பத்தி பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இதற்காக, அகஸ்தியம்பள்ளி, பெரியகுத்தகை, கரியாப்பட்டினம், வாய்மேடு, வெள்ளப்பள்ளம், நாகை சாலை, பஞ்சநதிக்குளம் கிழக்கு, தலைஞாயிறு, தாமரைப்புலம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 10 இடங்களில் கட்டடங்கள் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.