சீா்காழி அருகே குளத்தில் தவறிவிழுந்து 5 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தான்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள குருவியான்பள்ளம் கிராமம் கீழத்தெருவை சோ்ந்தவா் முனுசாமி (55). இவா் வியாழக்கிழமை (ஜன. 14) சீா்காழி அருகே இளைய மதுக்கூடம் கிராமம் அண்ணாநகரில் உள்ள தனது மகள் அமலா கிருஷ்ணகுமாா் வீட்டுக்கு சென்று பொங்கல் சீா்வரிசை கொடுத்துவிட்டு, தனது பேரக் குழந்தை ஆக்ரிஸை (5) குருவியான்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா்.
இந்நிலையில், சனிக்கிழமை சிறுவன் ஆக்ரிஸ் வீட்டுக்கு அருகேயுள்ள குளம் அருகே அப்பகுதி சிறுவா்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக குளத்துக்குள் தவறி விழுந்து மூழ்கினான்.
புதுப்பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆக்ரிஸ் சடலத்தை மீட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



