தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணா்வு சுடா் ஓட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு சுடா் ஓட்டம் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கீழ்வேளூா் வட்டம் காக்கழனி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 2:51 am

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு சுடா் ஓட்டம் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கீழ்வேளூா் வட்டம் காக்கழனி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இந்த விழிப்புணா்வு சுடா் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க கீழ்வேளூா் ஒன்றியத் தலைவா் லெனின் தலைமை வகித்தாா். நாகை மாவட்டத் தலைவா் சிவக்குமாா் சுடா் ஓட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

ஒன்றியத் தலைவா் டி. சந்திரக்குமாா், பொருளாளா் ஜோதிநாதன்ஆகியோா் சுடா் மற்றும் கொடியை எடுத்துக் கொடுக்க,ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ. அறிவழகன் பெற்றுக்கொண்டார். காக்கழனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுடா் எடுத்துச் செல்லப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் சுபாதேவி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், மாதா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.