நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பிளஸ் 2 தேர்வு ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளி சிறப்பிடம்

ராசிபுரம் அருகேயுள்ள கீரனூர் வெற்றி விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் 

Updated On :11 மே 2013, 12:26 pm IST

ராசிபுரம் அருகேயுள்ள கீரனூர் வெற்றி விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில்  சிறப்பிடம் பெற்றனர்.

நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், ராசிபுரம்  வெற்றி விகாஸ் பள்ளி  மாணவி எம்.வி.செüந்தர்யா 1200-க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்:

தமிழ் 198, ஆங்கிலம் 193, இயற்பியல் 197, வேதியியல் 200, கணினி அறிவியல் 200, கணிதம் 197 மதிப்பெண்கள்.

இவரை அடுத்து, பி.பத்மபிரியா 1182 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆம் இடம் பெற்றார். இவர் பாட வாரியாக தமிழ் 198, ஆங்கிலம் 191, இயற்பியல் 194, வேதியியல் 199, உயிரியல் 200, கணிதம் 200.

மாணவர் இ.தனசேகர் 1180 மதிப்பெண்கள் பெற்று, 3-ஆம் இடம் பெற்றுள்ளார்.  பாட வாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 197, ஆங்கிலம், இயற்பியல் 197, வேதியியல் 200, உயிரியல் 200, கணிதம் 199.

இவை தவிர, பொது இயந்திரவியல் பாடப் பிரிவில் மாணவர் டி.கெüரிசங்கர், ஏ.ஆனந்த் ஆகியோர் 200-க்கு 200 பெற்றுள்ளனர்.  இதில் மாணவர் டி.கௌரிசங்கர் 1200-க்கு 1168 மதிப்பெண்கள் பெற்று, பொது இயந்திரவியல் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

சமஸ்கிருத பாடத்தில் டி.ஐஸ்வர்யா, எம்.ஜனனி, டி.கார்த்திகா, பி.தினேஷ்குமார், ஏ.அஜித்குமார் ஆகியோர் 200-க்கு 198, பிரஞ்சு பாடத்தில் பி.பத்மபிரியா, எம்.முகமது நிகால், ஏ.அட்ரின்சுதிர் 200-க்கு 198 பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், தமிழ் பாடத்தில் எம்.வி.செüந்தர்யா 198 மதிப்பெண்களும்,  ஹிந்தி பாடத்தில் ரெனிதாமணி 194 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர். 

மேலும், கணித பாடத்தில் 35 பேரும், உயிரியல் பிரிவில் 29 பேரும், வேதியியல் பிரிவில் 25 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் எஸ்.குணசேகரன், தலைவர் எஸ்.கணேசன், செயலாளர் பாலசுப்பிரமணியன், தாளாளர் ஜி.வெற்றிச் செல்வன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.