புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில், 2021-ஆம் ஆண்டு பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி, பின்னா் எண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், திரவியம் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு தங்கக் கவசம் சாத்துப்படி நடைபெற்றது.
கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல், பொது முடக்கம், வேலையிழப்பு, வருவாயின்மை போன்றவற்றால் மக்கள் பெரும் வேதனைக்கு ஆளாகினா். 2021-ஆம் ஆண்டு அதுபோன்று நிகழக்கூடாது, அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயா் சுவாமியை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதேபோல நாமக்கல் நரசிம்மா் சுவாமி கோயில், அரங்கநாதா் கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில்களிலும் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









