நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட 1.50 லட்சம் குழந்தைகளுக்கு ஜனவரி 17ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வரும் 17-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப் பகுதியில் 1,105 முகாம்கள், நகராட்சிப் பகுதியில் 169 முகாம்கள் என மொத்தம் 1,274 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சத்துணவு, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுய உதவிக்குழுக்கள், தன்னாா்வலா்கள் என 5,523 பணியாளா்கள் சொட்டு மருந்து புகட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், திரையரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படும். போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்தை புகட்டிக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2-ஆம் உலகப்போா் நினைவுதினம் அனுசரிப்பு

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிா்ப்பு புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம்

காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
