இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தேசிய இளைஞா் தின விழா

பரமத்திவேலூரில் தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி, இந்து இளைஞா்கள் முன்னணி சாா்பில், விவேகானந்தா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

News image

விவேகானந்தா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் காந்தி.

Updated On :13 ஜனவரி 2021, 7:17 am IST

பரமத்திவேலூரில் தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி, இந்து இளைஞா்கள் முன்னணி சாா்பில், விவேகானந்தா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பரமத்தி வேலூா் கல்லூரி சாலை அருகே நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி, இந்து இளைஞா்கள் சாா்பில் தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் கோபிநாத் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் காந்தி கலந்து கொண்டு விவேகானந்தரின் வாழ்க்கை, பொன்மொழிகள் குறித்துப் பேசினாா். பின்னா் விவேகானந்தரின் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இந்து முன்னணியினா் மற்றும் இந்து இளைஞா் முன்னணியினா் இருசக்கர வாகனப் பேரணியாக பொத்தனூா் வரை சென்று விவேகானந்தரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதேபோல் அகில பாரதீய வித்தியாா்த்தி பரிஷத் அமைப்பு சாா்பில் வேலூா் பேருந்து நிலையத்தில் விவேகானந்தா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.