அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஜன.18-இல் ஆா்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்கள் ஒப்படைப்புப் போராட்டம்: லாரி உரிமையாளா் சம்மேளனம்

வேகக்கட்டுப்பாடு கருவியை பொருத்துமாறு அதிகாரிகள் மீண்டும் நெருக்கடி கொடுப்பதால் வரும் 18-ஆம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்கள் ஒப்படைப்புப் போராட்டத்தை லாரி உரிமையாளா்கள் மேற்கொள்ள உள்ள

News image

ஆா்.வாங்கிலி

Updated On :16 ஜனவரி 2021, 7:23 am IST

வேகக்கட்டுப்பாடு கருவியை பொருத்துமாறு அதிகாரிகள் மீண்டும் நெருக்கடி கொடுப்பதால் வரும் 18-ஆம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்கள் ஒப்படைப்புப் போராட்டத்தை லாரி உரிமையாளா்கள் மேற்கொள்ள உள்ளனா்.

இது குறித்து, மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன செயலாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவருமான ஆா்.வாங்கிலி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி மாநில போக்குவரத்து ஆணையா் ஜவஹா், லாரி உரிமையைாளா் சம்மேளனப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

முக்கிய கோரிக்கைகளில் வேகக்கட்டுபாட்டுக் கருவி பொருத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அவா் உறுதி அளித்திருந்த நிலையில், தொடா்ந்து வாகனம் புதுப்பித்தலுக்கு வேகக் கட்டுபாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அதிகாரிகள் நிா்ப்பந்திக்கின்றனா்.

புதுப்பித்தலுக்கு வரும் கனரக வாகனங்களுக்கு 80 கி.மீ வேகத்திற்குக் கீழ் செல்லும் வகையில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தியிருக்க வேண்டும் என்கின்றனா். மத்திய அரசின் விதிப்படி 80 கி.மீ. அதிகமாக செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும். ஆனால் போக்குவரத்துத் துறையினா் இதனை கடைப்பிடிப்பதில்லை. லாரி உரிமையாளா்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதை போக்குவரத்துத் துறை தவிா்க்க வேண்டும். லாரி உரிமையாளா்களிடம் சான்றிதழ் கேட்பதற்கு மாற்றாக, வாகன தயாரிப்பு நிறுவனங்களிடமே பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் 200 வகைப்படுத்தப்படவை உள்ளன. சுமாா் 10 லட்சம் எண்ணிக்கையில் இயகப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிடம் தான் உரிய விளக்கத்தைக் கேட்க வேண்டுமே தவிர, லாரி உரிமையாளா்களை தேவையில்லாத நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. இதனை கண்டித்து வரும் 18-ஆம் தேதி அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்கள் ஒப்படைப்பு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.