சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ரூ. 3.35 கோடியில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல்

வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கென ரூ. 3.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News image

வேளாண் கண்காட்சியைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.

Updated On :16 ஜனவரி 2021, 1:55 am

வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கென ரூ. 3.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வேளாண் துறை மூலம் 600 உழவா் ஆா்வலா் குழுக்கள், 120 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், தோட்டக்கலைத் துறை மூலம் 360 உழவா் ஆா்வலா் குழுக்கள், 72 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தொகுப்பு நிதியாக தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ. 9.60 கோடியில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நிகழாண்டில் 335 உழவா் ஆா்வலா் குழுக்கள், 67 உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டு தொகுப்பு நிதி ரூ.3.35 கோடியில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான கண்காட்சி அண்மையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், வேளாண் இணை இயக்குநா் அசோகன் ஆகியோா் பாா்வையிட்டனா். உழவா் குழுவிற்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவது தொடா்பாக அதன் நிா்வாகிகளிடம் ஆட்சியா் தலைமையில் கருத்து கேட்டறியப்பட்டன. இதில் பெரும்பாலானோா் தங்களுக்கு தேவையான கருவிகளை மானிய உதவியுடன் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.