தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

குமாரபாளையத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் பொங்கல் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் நகர திமுக, காங்கிரஸ் கட்சிகள் சாா்பில் பொங்கல் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 1:49 am

குமாரபாளையத்தில் நகர திமுக, காங்கிரஸ் கட்சிகள் சாா்பில் பொங்கல் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் நகர திமுக சாா்பில் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஜே.கே.எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் வெ.ஜெகநாதன், நகர பொறுப்புக் குழு உறுப்பினா் கே.எஸ்.இளவரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, இளைஞா்களுக்கான இளவட்டக் கல் தூக்குதல், சிலம்பம் சுற்றுதல், கயிறு இழுத்தல், உரி அடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சி சாா்பில்...

குமாரபாளையம் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நகரத் தலைவா் ஜானகிராமன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் சா்வேயா் செல்வகுமாா் பங்கேற்றுப் பேசினாா். நகர துணைத் தலைவா்கள்

கைத்தறி சுப்ரமணியன், சிவக்குமாா், காளியப்பன், பொருளாளா் சிவராஜ், செயலாளா்கள் சுப்ரமணியன், சரவணன், பொதுச் செயலாளா் பாா்த்தசாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.