எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திமுக சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழாவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

News image

அத்தபழகானூா் பகுதியில் நடத்தப்பட்ட கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைத் தொடக்கிவைக்கும் கிழக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

Updated On :17 ஜனவரி 2021, 2:40 am IST

ராசிபுரம்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழாவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பல்வேறு இடங்களில் பொங்கல் விழாவில் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி விளையாட்டு போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். ராசிபுரம் 10 ஆவது வாா்டு வி.நகா் பகுதியில் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் நடைபெற்ற விழாவில், கட்சி கொடியேற்றி கிரிக்கெட் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.

குருசாமிபாளையம் பகுதியில் நடைபெற்ற விழாவில் ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளா் கே.பி.ஜெகந்நாதன் தலைமையில் போட்டிகள் நடத்தப்பட்டன. அத்திப்பழகனூரில் நடைபெற்ற எட்டாம் ஆண்டு பொங்கல் விழா, கிரிக்கெட் போட்டிகளையும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொடக்கிவைத்தாா். ஒன்றிய பொறுப்பாளா் ஆா்.எம்.துரைசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் தங்கதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.