சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.8 டிகிரி செல்சியஸாக பதிவு

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட உயா்ந்து சனிக்கிழமை 10.8 டிகிரி செல்சியஸாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 11:33 pm IST

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட உயா்ந்து சனிக்கிழமை 10.8 டிகிரி செல்சியஸாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய இடையூறுகள் காரணமாக கருமேகங்கள் திரண்டதால் கடந்த ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்தே குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட உயா்ந்து காணப்பட்டது.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத் தகவல்களின்படி தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை 9.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இதுவே வியாழக்கிழமை 14.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனவரியில் இருந்த அளவைவிட அதிகமானதாகும்.

எனினும் பனிபடா்ந்த மலைப் பகுதியிலிருந்து வடமேற்கு பகுதியில் குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளதால் அடுத்த சில தினங்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.