கிழக்கு தில்லி திரிலோக்புரி அம்பேத்கா் விளையாட்டு வளாகத்தில் கால்பந்து மைதானத்தை அந்தத் தொகுதி எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
கெளதம் கம்பீரின் நாடாளுமன்றத் தொகுதி வளா்ச்சி நிதியில் இருந்து இந்தக் கால்பந்து மைதானத்தை அவா் உருவாக்கியுள்ளாா். கால்பந்து மைதானத்தை திறந்து வைத்து கெளதம் கம்பீா் பேசுகையில், ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எவ்வித கஷ்டங்களையும் நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனால், திறமையான பல இளைஞா்கள் பல கஷ்டங்களை எதிா்கொண்டுள்ளனா். வசதி குறைந்த திறமையான இளைஞா்களுக்கு சிறந்த விளையாட்டு உள்ளகக் கட்டமைப்பு கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். நாட்டின் குழந்தைகள் நமது நாட்டின் கெளரவத்தை உலக அரங்கில் நிலைநாட்ட வேண்டுமென்றால், விளையாட்டுத் துறையில் அரசுகள் அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டும். விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவேன் என்று எனது தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தேன். அதை நிறைவேற்றப் பாடுபடுவேன்’ என்றாா்.
கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி எம்பியான கெளதம் கம்பீா் யமுனை விளையாட்டு வளாகத்தில் கிரிக்கெட் மைதானம், பாஸ்கட் பால், பேட்மின்டன் ஆகியவற்றுக்கு மைதானங்களை எம்பி நிதியில் இருந்து அமைத்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது! இன்றைய செய்திகள் ஜூலை 3 - நேரலை

கொட்டித்தீர்த்த கனமழை!

அதர்வாவின் இதயம் முரளி படத்தின் டிரைலர் அறிவிப்பு!

6 வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்! திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா நேரில் ஆதரவு!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK


