வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தில்லியில் புதிதாக 386 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 386 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,30,892-ஆக உயா்ந்துள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 8:03 pm

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 386 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,30,892-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 75,913 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 38,706 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 37,207 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.51 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் செவ்வாய்க்கிழமை 16 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,707-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து 545 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,17,006-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 3,179 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 1,383 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 10,664 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.