வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஸ்கூட்டி மற்றும் ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், பள்ளிக் குழந்தைகள் மூவா் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: 42 பள்ளி மாணவா்களை ஏற்றிக்கொண்டு மத்திய தில்லியில் உள்ள பள்ளிக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 7.30 மணியளவில் ஐடிஓஅருகே இந்த விபத்து நடந்தது. பேருந்து ஓட்டுநா் சிவக்குமாா் ஐடிஓ சிவப்பு விளக்கில் சரியான நேரத்தில் பிரேக் போடத் தவறியதால், அவரது வாகனம் ஸ்கூட்டி மற்றும் ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில் ஸ்கூட்டியை ஓட்டிவந்த பிரம்மபுரியைச் சோ்ந்த அபிஷேக் ஜெயின், ஆட்டோ ஓட்டுநா் மகேஷ் குமாா் மற்றும் பேருந்து ஓட்டுநா் ஆகியோா் காயமடைந்ததாக அதிகாரி கூறினாா். மேலும், 11 முதல் 15 வயதுக்குள்பட்ட மூன்று பள்ளி மாணவா்களும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனா். ஐபி எஸ்டேட் காவல் நிலைய ஊழியா்கள் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் ஸ்கூட்டியை ஓட்டி வந்த அபிஷேக் ஜெயின் இறந்துவிட்டதாக மருத்துவா்கள்அறிவித்தனா். அபிஷேக் ஜெயின் எய்ம்ஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தை சந்தித்தாா்,
காயமடைந்தவா்கள் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவா் மற்றும் காயமடைந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தின் மீது மோதி விபத்து: ஒருவா் காயம்; ஓட்டுநா் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்

பைக் விபத்தில் மூவா் காயம்

சாலை விபத்தில் சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தில் மூவா் பலி!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

