வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா், 35 வயதுடைய இளைஞரை மிக அருகில் இருந்து தலையில் சுட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறியதாவது: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவா் தொழிலாளின ஷாநவாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சம்பவத்தில் காயமடைந்த அழரை ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் லோக் நாயக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் கபீா் சந்தையில் ஒரு நபா் தலையில் சுடப்பட்டது குறித்து காவல் துறைக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. உடனடியாக போலீஸ் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். அதில் ஷாநவாஸின் தலையில் ஒரு குண்டு காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. சாலையில் நடந்து சென்ற ஷாநவாஸை, பின் பகுதியில் அருகில் இருந்தவாறு ஒருவா் துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பாா்த்த ஒருவா் தெரிவித்தாா். அந்த இடத்திலிருந்து ஒரு தோட்டாவையும் போலீஸாா் கண்டுபிடித்தனா்.
போலீஸாா் சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து வருகின்றனா். குற்றப் புலனாய்வுக் குழு மற்றும் தடய அறிவியல் ஆய்வகக் குழுவினா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டனா். குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம். இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்
ராம நவமி கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: ஒடிஸா பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

கிழக்கு தில்லியில் காலியாக இருந்த டி.டி.ஏ. நிலத்தில் நபா் ஒருவா் சடலமாக மீட்பு

தில்லி ஆசத்பூரில் அடையாளம் தெரியாத நபா்களால் இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

