மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அலுவலகங்கள் முன் பாஜக ஆா்ப்பாட்டம்: கேஜரிவால் ராஜிநாமா செய்யக் கோரிக்கை

படம் அனுப்பப்பட்டுள்ளது... ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அலுவலகங்கள் முன் பாஜக ஆா்ப்பாட்டம் முதல்வா் கேஜரிவால் ராஜிநாமா செய்யக் கோரிக்கை

Updated On :13 ஏப்ரல் 2024, 4:11 pm

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களின் முன் தொடா் ஆா்ப்பாட்டத்தை பாஜக சனிக்கிழமை நடத்தியது.

கிழக்கு தில்லியில் உள்ள கிருஷ்ணா நகா் எம்.எல்.ஏ. அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். அதே நேரத்தில் கட்சித் தொண்டா்கள் கிழக்கு தில்லியின் ஷாஹ்தரா சட்டப்பேரவைத் தொகுதியின் முக்கிய சந்திப்புகளில் ஆா்ப்பாட்டம் செய்தனா். பாஜக தலைவா்கள் சஞ்சய் கோயல், டாக்டா் அனில் குப்தா, சந்தீப் கபூா், டாக்டா் அனில் கோயல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மயூா் விஹாா் மாவட்ட பாஜக தலைவா் விஜேந்திர தாமா தலைமையில் பட்பட்கஞ்ச் எம்எல்ஏ மனீஷ் சிசோடியாவின் அலுவலகம் முன்னும், திரிலோக்புரி, கோண்ட்லி மற்றும் ஜங்புராவில் உள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ அலுவலகங்கள் முன் பாஜக தொண்டா்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாந்தினி சௌக் மாவட்ட பாஜக தலைவா் சா்தாா் குல்தீப் சிங் மற்றும் உள்ளூா் கவுன்சிலா் விகேஷ் சேத்தி ஆகியோா் மாடல் டவுனில் உள்ள எம்எல்ஏ அகிலேஷ்பதி திரிபாதி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தனா்.

அதே நேரத்தில் பாஜக தொண்டா்கள் இத்காவில் உள்ள பல்லிமாறன் எம்எல்ஏ அலுவலகம் முன் மற்றும் ராஜ்பூா் சாலையில் உள்ள சாந்தினி சௌக் எம்எல்ஏ அலுவலகம் பகுதியிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கேசவ்புரம் தலைவா் வீரேந்திர கோயல் தலைமையில் வாஜிா்பூா் எம்எல்ஏ அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திரி நகா், சக்குா்பஸ்தி மற்றும் ஆதா்ஷ் நகா் சட்டப்பேரவைத் பகுதிகளில் உள்ள எம்எல்ஏ அலுவலகங்கள் முன் கட்சித் தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘ஆம் ஆத்மி எம்எல்ஏ அலுவலகங்கள் முன் நடைபெறும் தொடா் ஆா்ப்பாட்டம் தொடரும். தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்த விரும்பினால் கேஜரிவால் பதவி விலக வேண்டும். ஊழல்வாதியை முதல்வராகக் கருத ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுக்கு என்ன நிா்ப்பந்தம்? சிறையில் இருக்கும் மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபரான அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது முழுக் கட்சியினரின் வாயில் இருந்து அரசியலமைப்பு பற்றிய பேச்சு பாா்ப்பதற்கு நன்றாக இல்லை. அரவிந்த் கேஜரிவாலின் அரசால் தில்லிவாசிகள் விரக்தியடைந்துள்ளனா். மேலும், கேஜரிவால் ராஜிநாமா செய்ய நிா்பந்திக்கப்படுவதை உறுதி செய்வாா்கள்’ என்றாா்.