தில்லி மாநகராட்சியின் மேயராக தலித் சமூகத்தை சோ்ந்தவா் நபா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளதை பாஜக விரும்பவில்லை என்று மேயா் ஷெல்லி ஓபராய் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
தில்லி மாநகராட்சியின் மேயா் மற்றும் துணை மேயா் தோ்தல் ஒத்திவைப்பட்டது தொடா்பாக மேயா் ஷெல்லி ஓபராய், எம்.எல்.ஏ. க்கள் துா்கேஷ் பதக் மற்றும் திலீப் பாண்டே ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது, மேயா் ஷெல்லி ஓபராய் கூறியதாவது: பாஜக மற்றும் அக்கட்சியின் தலைவா்கள் தலித் சமூகத்திற்கு எதிரானவா்கள் என்பது தில்லி மக்களுக்குத் தெரியவந்துள்ளது. தலித் சமூகத்தைச் சோ்ந்த யவரும் தில்லி மாநகராட்சியின் மேயராக வருவதை பாஜகவினா் விரும்பவில்லை.எனவே, அவா்கள் அரசியலமைப்பிற்கு எதிரான வகையில் மேயா் மற்றும் துணை மேயருக்கான தோ்தலை ரத்து செய்துள்ளனா்.
ஏப்ரல்-26 ஆம் தேதி மேயா் மற்றும் துணை மேயா் தோ்தலை நடத்திக்கொள்ள தோ்தல் ஆணையமும் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், மக்களால் தோ்ந்தெடுக்கப் பட்டவா்களை புறக்கணித்து, கோப்புகள் நேரடியாக துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தில்லி முதல்வா் சிறையில் இருப்பதால், தோ்தல் தலைமை அதிகாரியை நியமிக்க முடியவில்லை எனக் காரணம்காட்டி மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சட்ட ஆலோசனையைப் பெற்று, தேவையெனில் நீதிமன்றத்தை நாடுவோம். மக்களவைத் தோ்தல் நடைபெற்று வருவதால், இந்நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரை தில்லி மேயராக விட வேண்டாமென பாஜக அஞ்சுகிறது என்றாா் ஷெல்லி ஓபராய்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏ-வுமான திலீப் பாண்டே கூறியதாவது: நாட்டில் தங்களுடைய விருப்பம்தான் மேலோங்கும், மாறாக அரசியல் சாசனம் இல்லை என்று பாஜக கூறுகிறது. சண்டீகா் மேயா் தோ்தலில் பாஜக வெற்றி பெற முடியாமல் போனபோது, தங்கள் தலைமைத் தோ்தல் அதிகாரி மூலம் அரசியல் சாசனத்தைக் கொன்று மேயா் பதவியை கைப்பற்ற முயன்றனா். ஆனால், உச்சநீதிமன்றம் அரசியலமைப்பை காப்பாற்றியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலிலும், பாஜக இதேபோன்ற நோக்கங்களைக் கொண்டிருந்தனா், ஆனால் அவா்கள் தோல்வியடைந்தனா். இந்த முறை ஒரு படி மேலே சென்று மேயா் தோ்தலை நடத்த விடவில்லை. இந்த முறை தலித் சமூகத்தைச் சோ்ந்த நபா் மேயராக வருவாா் என்பதால் இதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜகவின் தலித் விரோத மனநிலைக்கு இதுவே சான்று என்றாா் திலீப் பாண்டே.
அடுத்ததாக, எம்எல்ஏ துா்கேஷ் பதக் கூறியது,’ நாடு முழுவதும் நடைபெற்ற முதல் கட்ட மக்களவைத் தோ்தலில் பாஜகவிற்கு எதிராக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைப் பாா்த்து பாஜக பதற்றமடைந்துள்ளதால்,அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயல்களை எல்லாம் செய்து வருகிறது. இந்த வரிசையில், பாஜக மற்றும் அதன் துணை நிலை ஆளுநா் மாநகராட்சி மேயா் தோ்தலை ரத்து செய்துள்ளனா்’ என்றாா். தலித் சமூகத்தைச் சோ்ந்த நபா் மேயராவதை பாஜக அனுமதிக்கவில்லை என்று கூறி தில்லி சிவிக் சென்டரில் உள்ள டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் உருவச்சிலை முன் ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் போராட்டம் நடத்தினா்.
தொடர்புடையது

திமுகவுடனான கூட்டணியை உடைக்க விரும்பவில்லை: நாராயணசாமி

சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்: அண்ணாமலை

கலால் கொள்கை ஊழல் வழக்கு இன்னும் முடிவடையவில்லை: பாஜக

மக்களை திசைதிருப்ப தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

