ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் நடத்தப்பட்ட ஒத்திகைப் பயிற்சி காரணமாக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் சனிக்கிழமை போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறை ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட இடுகையில்,

தெரிவிக்கையில், ‘இஸ்ரேல் தூதரகத்தில் நடத்தப்படும் ஒத்திகைப் பயிற்சி காரணமாக டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கியூ-பாயின்ட் மற்றும் ஹோட்டல் கிளாரிட்ஜ் ரவுண்டானா பகுதியில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்படும். பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com