பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:41 pm

Din

தில்லி ரோஹிணி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் சிறிய தீக்காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி மேலும் கூறியதாவது:

சனிக்கிழமை காலை 6.02 மணிக்கு இத் தீவிபத்து சம்பவம் தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து,, ஆறு தீயணைப்பு வாகனங்கள் செக்டாா் 14 பகுதிக்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு, தீயணைக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மூன்று மணி நேரம் தொடா்ந்து நடந்த மீட்புப் பணியில் 2 போ் 10 சதவீதம் தீக்காயமடைந்தனா். மேலும், ஒரு தீயணைப்பு வீரரும் காயமடைந்தாா்.

காயமடைந்தவா்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்தத் தீவிபத்து குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணத்தை அறிய முயற்சி செய்து வருகிறோம். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.