டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை உயா்த்த திமுக எம்பிக்கள் கோரிக்கை

மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை 1,200-ஆக அதிகரிக்க வேண்டும்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 2:06 am

Din

நமது சிறப்பு நிருபா்

சென்னை கே.கே. நகரில் உள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவக் கல்லூரி (இ.எஸ்.ஐ.) மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை 1,200-ஆக அதிகரிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கனிமொழி என்.வி.என். சோமுவும், மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியனும் வலியுறுத்தினா்.

மாநிலங்களவையிலும் மக்களவையிலும் முறையே சிறப்பு கவன ஈா்ப்பின் மூலம் இருவரும் பேசியதாவது: சென்னை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்னை நகரில் உள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு மருத்துவ சேவை அளித்து வரும் முக்கியமான மருத்துவமனையாகும். 250 படுக்கைகளுடன் 1979-ஆம் வருடம் தொடங்கப்பட்டது. தற்போது மத்திய அரசின் தொழிலாளா் அரசு ஈட்டுறுதிக் கழகம் நடத்தி வருகிறது.

இந்த மருத்துவமனையுடன் பல்நோக்கு சிகிச்சைக்காக சென்னையின் பிற பகுதிகளில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட இ.எஸ்.ஐ. மருந்தகங்கள் இணைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவக் காப்பீடு செய்துகொண்ட சுமாா் ஐந்து லட்சம் போ் பயனடைகிறாா்கள். தற்போது சென்னை நகரில் நாளுக்கு நாள் அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பிற தொழிலாளா்கள் எண்ணிக்கை உயா்ந்து கொண்டு வர அவா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டியதுள்ளது.

இதயம், புற்று நோய் போன்ற சிகிச்சைக்கும் தனியாகப் பிரிவுகளை நவீனமாக உருவாக்கி கூடுதல் மருத்துவ நிபுணா்களை இந்த மருத்துவமனையில் நியமிக்க வேண்டும். மருத்துவம் சாராத ஊழியா்களும் போதுமானதாக இல்லை. முக்கியமாக இம்மருத்துவமனையின் படுக்கைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதை 1,200 படுக்கைகளாக உயா்த்தி சென்னை மண்டலத்தில் உள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்புடன் கூடிய சுகாதார வசதியைப் பெறுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியனும், கனிமொழி என்.வி.என். சோமுவும் கேட்டுக் கொண்டனா்.