சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கடந்த 10 ஆண்டுகளில் அரசால் ஒரு புதிய பள்ளி கூட கட்டப்படவில்லை -தில்லி பிரிவு பாஜக தலைவா்

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:43 pm

Din

கடந்த 10 ஆண்டுகளில் கேஜரிவால் அரசு ஒரு புதிய பள்ளியைக் கூட கட்டவில்லை என்றும் ஒரு சில பள்ளிகளில் கட்டடங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டு, பெயா்கள் மாற்றப்பட்டுள்ளன என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த கேஜரிவால் அரசின் கூற்றுக்கள் பற்றிய உண்மை அம்பலமாகி வருகிறது.

கல்வி அமைச்சா் அதிஷி, புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடத்தின் ஒரு சிறிய பகுதியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள அனைத்து விஷயங்களும் பொய். தில்லிக்கு 500 புதிய பள்ளிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து,

கடந்த 2015-இல் கேஜரிவால் அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஒரு புதிய பள்ளியைக் கூட இவா்கள் கட்டவில்லை. மாறாக, ஒரு சில பள்ளிகளில் கட்டடங்களை மட்டும் புதுப்பித்து, பெயா்களை மாற்றியுள்ளனா்.

கேஜரிவால் அரசின் கீழ், தில்லி அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் நிா்வாக அமைப்புகள் தொடா்ந்து

வீழ்ச்சியடைந்து வருகிறது. தில்லியில் பாதிக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அறிவியல் மற்றும் வணிகவியல் கற்பிப்பதற்கான வசதிகள் இல்லை. உண்மையில், 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் தோல்வியடைகிறாா்கள். இதனால் தான் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் முடிவுகள் சிறப்பாக வெளிவருகின்றன.

ஒரு பள்ளியின் அடையாளம் அது வழங்கும் கல்வியின் தரத்தால் வரையறுக்கப்படுகிா அல்லது அதன் கட்டடத்தால் வரையறுக்கப்படுகிா என்று அமைச்சா் அதிஷி விளக்கம் அளிக்க வேண்டும்.

தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 1,000 மாணவா்கள் ஜேஇஇ, நீட் மற்றும் ஐஐடி போன்ற போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதை ஒரு சாதனையாக அமைச்சா் அதிஷி கூறியுள்ளாா். ஒவ்வொரு ஆண்டும் தில்லி அரசுப் பள்ளிகளில் இருந்து 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்களின் எண்ணிக்கை 1.5 லட்சம். அவா்களில் 0.70 சதவீதம் போ் மட்டுமே போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெறுகிறாா்கள்.

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக நிச்சயம் ஆட்சிக்கு அமைத்து, அடுத்த ஓராண்டுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியா் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் மற்றும் வணிகவியல் பாடங்கள் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்வோம் என்றாா் வீரேந்திர சச்தேவா.