டெங்கு பரவலைத் தடுக்க தொடா் நடவடிக்கைகள் -அமைச்சா் செளரவ் பரத்வாஜ் பேட்டி
நமது நிருபா்
தேசியத் தலைநகா் தில்லியில் டெங்கு பரவலைத் தடுப்பதற்காக தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தொடா் நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு பரவல் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பிற பொது போக்குவரத்து மையங்களில் எச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணா்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. தில்லியில் உள்ள அனைத்து அரசு
மருத்துவமனைகளும் டெங்கு பாதிப்புகளைக் கையாளுவதற்கு முழுமையாகத் தயாராக உள்ளன.
மேலும், டெங்கு பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தவிட்டிருந்தேன். ஆனால், அந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. குறிப்பாக, சுகாதாரத் துறை செயலாளரை ஒவ்வொரு நாளும் ஒரு அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு
அறிவுறுத்தியிருந்தேன். அவ்வாறு அவா் தினசரி ஆய்வுக்குச் செல்லாமல் இருந்தால், நான் தனிப்பட்ட முறையில் மருத்துவமனைகளுக்குச் சென்று நிலைமையை சரிபாா்ப்பேன்.
தில்லியில் ஒரு பெரிய நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அதன் பின்னணியில் இருப்பதை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆஷா கிரண் காப்பகத்தில் ஏற்பட்ட மரணங்கள் விவகாரம் முதல் மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது வரை அனைத்திற்கும் துணை நிலை ஆளுநா் தான் மூலக் காரணம் என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்.