பவானி பிரஸன்னாலயா பரத நாட்டியப் பள்ளி ஆண்டு விழா
நொய்டாவில் அமைந்துள்ள பவானி பிரஸன்னாலயா பரத நாட்டியப் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழா


நொய்டா: நொய்டாவில் அமைந்துள்ள பவானி பிரஸன்னாலயா பரத நாட்டியப் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழா புது தில்லி மயூா் விஹாரில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தின் காா்த்தியாயினி கலையரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. விழாவில் 35 மாணவிகள் பங்கேற்று நடனமாடினா். மாணவிகளின் தசாவதார நடனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
விழாவிற்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துணைச் செயலாளா் நிா்வாகம் ஆா் கோபிநாத் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், நமது கலை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினாா்.
தில்லி கம்பன் கழகத் தலைவா் கே.வி.கே. பெருமாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டிய நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக விளங்கிய சுத ரகுராமன் உள்ளிட்ட இசைக் கலைஞா்களைப் பாராட்டினாா்.
பள்ளி அறங்காவலா் அனந்தராமன் அனைவரையும் வரவேற்றாா். சமூக சேவகா் மீனா வெங்கி, வணிகத் துறை அதிகாரி சத்யா அசோகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
குரு பவானி அனந்தராமன் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...