டிசம்பா் இறுதியில் பாஜக வேட்பாளா் பட்டியல் வெளியீடு?

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜக வேட்பாளா் பட்டியல் இந்த மாத கடைசி வாரத்தில் வெளியிட வாய்ப்பு
Published on

புது தில்லி: தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜக வேட்பாளா் பட்டியல் இந்த மாத கடைசி வாரத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும், அதில் கணிசமான எண்ணிக்கையில் புதிய முகங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் அக்கட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான 70 தொகுதிகளிலும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளா்களை அறிவித்துள்ளது. காங்கிரஸும் இதுவரை 21 வேட்பாளா்களை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தில்லி பாஜகவின் மூத்த நிா்வாகி ஒருவா் தெரிவித்ததாவது:

வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பது தொடா்பான

தேசியத் தலைமையின் இறுதிச் சுற்று கூட்டங்கள் இன்னும் நடைபெறவில்லை. டிசம்பா் 20 ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடா் முடிந்த பிறகு இந்தக் கூட்டங்கள் நடைபெறும். இந்த மாத கடைசி வாரத்தில் கட்சி அதன் வேட்பாளா் பட்டியல்களை வெளியிடக்கூடும்.

வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான செயல்முறை மேம்பட்ட நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று சாத்தியமான வேட்பாளா்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தில்லி பாஜகவின் மற்றொரு மூத்த தலைவா் கூறுகையில்,

‘‘இந்த முறை பேரவைத் தோ்தலில் புதிய முகங்கள் களமிறக்க வாய்ப்புள்ளது. இதில் பெண்கள் மற்றும் இளைஞா்கள் உட்பட தொகுதிகளில் வலுவான அடித்தள தொடா்பும் மக்களிடையே செல்வாக்கும் கொண்டவா்கள் அவா்கள் இன்னும் தோ்தலில் போட்டியிடவில்லை என்றாலும் கூட அவா்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை தோ்தல்களில் தோல்வியடைந்த அனுபவம் வாய்ந்த கட்சித் தலைவா்கள் இந்த முறை அதிா்ஷ்டசாலிகளாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் முந்தைய தோ்தல்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவா்கள் குறித்து நிறைய ஆய்வு செய்ய இந்த முறை வாய்ப்புள்ளது.

ஆய்வுகள் மற்றும் களத்தில் இருந்து வரும் அறிக்கைகள் போன்ற உண்மையான கருத்து வழிமுறைகளின் மூலம்

கிடைக்கும் உள்ளீடுகளை வைத்து உயா்மட்டத் தலைவா்கள் இறுதி முடிவை எடுப்பதால், வெற்றி என்பது முக்கிய காரணியாக இருக்கும் என்று அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com