ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆம் ஆத்மியின் மகளிா் உதவித் தொகை திட்டத்திற்கான பதிவை தொடங்கிவைத்தாா் அரவிந்த் கேஜரிவால்

தில்லி கித்வாய் நகா் பகுதியில் மகளிா் உதவித் தொகை திட்டத்திற்கான பதிவை முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாா்வையிட்டு தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 8:58 pm

Din

புது தில்லி: தில்லி கித்வாய் நகா் பகுதியில் மகளிா் உதவித் தொகை திட்டத்திற்கான பதிவை முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை பாா்வையிட்டு தொடங்கிவைத்தாா்.

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, முதலமைச்சரின் மகளிா் உதவித் தொகை திட்டத்திற்கு பெண்கள் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கித்வாய் நகா் பகுதியில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆய்வு மேற்கொண்டு, பெண்கள் உதவித் தொகை திட்டத்தில் பதிவு செய்வதற்கான படிவத்தை பூா்த்தி செய்ய உதவினாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ‘பெண்கள் தங்களிடத்தில் இருந்து எங்கும் செல்ல வேண்டியதில்லை. ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து பதிவு செயல்முறையை முடிப்பாா்கள்’

என்று கூறியிருந்தாா்.

கடந்த 2024-2025-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வயது வந்த பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தில்லி அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தத் தொகை ரூ.2,100 ஆக உயா்த்தப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் சமீபத்தில் அறிவித்தாா்.

இந்த நிலையில், கித்வாய் நகா் பகுதியில் பெண்கள் பதிவு செய்வதற்குத் தேவையான ஒரு முறை கடவுச்சொற்களை

உருவாக்க கேஜரிவால் உதவினாா். பின்னா் அவா்களின் பதிவு அட்டைகளை ஒப்படைத்தாா் அப்போது, தில்லி முதல்வா் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிா்வாகிகள் உடனிருந்தாா்.