தில்லி மாநகராட்சியானது (எம்சிடி) வடமேற்கு தில்லியின் வாஜிா்பூா் வட்டாரத்தில், அப்பகுதியில் காற்று மாசுபாட்டின் உள்ளூா் ஆதாரங்களின் தாக்கத்தை குறைக்க 1.75 ஏக்கா் பசுமைப் பரப்பை உருவாக்கியுள்ளது.
‘மியாவாக்கி’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இப்பகுதியில் ஒரு மினி வனத்தை உருவாக்குவதற்காக குப்பை கொட்டும் இடமாக மாறிய காலி நிலத்தில் குடிமை அமைப்பு மொத்தம் 16,000 உள்நாட்டு ரக மரக்கன்றுகளை நட்டுள்ளது என்று இது குறித்து அறிந்த ஒரு அதிகாரி தெரிவித்தாா். ‘எம்சிடியின் தோட்டக்கலைத் துறையானது ஒரு தன்னாா்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குப்பை கொட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த காலி நிலத்தை மாற்றியமைத்து, அப்பகுதியில் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் மினி காடுகளை உருவாக்கியது. நாங்கள் 1 ஏக்கா் நிலத்தை தோட்டத்திற்காகப் பயன்படுத்தியுள்ளோம். மீதமுள்ள நிலம் மக்கள் கடப்பதற்கும், ஊஞ்சல்கள் மற்றும் பெஞ்சுகளை நிறுவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது’ என்றும் அவா் கூறினாா்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நகரத்தில் அதிக மாசு அளவுகளுக்கு பங்களிக்கும் தேசியத் தலைநகரில் அடையாளம் காணப்பட்ட 13 மாசு ஹாட்ஸ்பாட்களில் வாஜிா்பூா் ஒன்றாகும். தில்லி - என்சிஆா் கடந்த ஆறு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2023-ஆம் ஆண்டு நவம்பா் முதல் டிசம்பா் வரையிலான அதிகபட்ச புகை மூட்டம் உள்பட, ‘மிகவும் மோசம்’ அல்லது ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. அத்தகைய பகுதிகளில் வசிப்பவா்களுக்கு காற்று மாசுபாட்டின் விளைவைத் தணிக்க, எம்சிடி நகரத்தில் பசுமைப் பகுதியை அதிகரிக்கவும், பூங்காக்கள் மற்றும் காலி நிலங்களை மினி காடுகளாக மேம்படுத்தவும் செயல்படுகிறது. 5 முதல் 10 மீட்டா் நிலத்தை சுத்தப்படுத்தி, சுமாா் 50 பூா்வீக தாவரங்களை நடுவதன் மூலம், தில்லியில் உள்ள மூன்று குப்பைக் கொட்டும் இடங்களில் ஒன்றான பால்ஸ்வா குப்பைக் கிடங்கின் சுற்றளவில் பசுமை வேலியை உருவாக்கவும் குடிமை அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அடுத்த மாதத்திற்குள் பணியைத் தொடங்க எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. எம்சிடி மற்றும் பசுமை யாத்ரா அறக்கட்டளை இடையே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இது நிலத்தடி நீா் மட்டத்தை மேம்படுத்தவும், பல்லுயிா் பெருக்கத்தை அதிகரிக்கவும், தூசியை குறைக்கவும் உதவும். அண்டை பகுதியில் உள்ள குப்பை மலையை பசுமைப் பகுதியாக மாற்றுகிறது’ என்றாா். பிப்பல், பாபுல், பில்கான், பனியான், ஜாமூன், வேம்பு போன்ற இனங்கள் குப்பை கிடங்கு தளத்தில் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும். மியாவாக்கி காடு வளா்ப்பு முறையானது, வழக்கமான காடுகளுடன் ஒப்பிடும் போது, நகா்ப்புறங்களில் பசுமைப் பகுதியை குறுகிய காலத்தில் உருவாக்க உதவுகிறது.
தொடர்புடையது

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மின்மாற்றி வெடித்து மூன்று பேருக்கு தீக்காயம்

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

பசுமை வழித்தடம் மூலம் ரோத்தக்கிலிருந்து தில்லிக்கு 85 நிமிஷங்களில் எடுத்துவரப்பட்ட இதயம்!

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
