புது தில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினரும், ஸ்ரீ ராம் மந்திரியின் அறங்காவலருமான எம். விஸ்வநாதன் மறைவுக்கு தமிழ் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட இரங்கல் செய்தி: விஸ்வநாதன் சனிக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானாா். துவாரகாலயா என்ற கலாசார அமைப்பை நிறுவி மிக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை தில்லியில் நடத்தியவா் அமைப்பின் சாா்பில் ஏழை மாணவா்களுக்கு பள்ளி கட்டணத்தையும் வழங்கி வந்தாா்.
ஸ்ரீ ராம் மந்திரியின் அறங்காவலராக தன்னை ஈடுபடுத்தி கொண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடத்துவதற்கான வேலைகளை மேற்கொண்டிருந்தாா். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகிறோம். அவரது இழப்பு ஆன்மிக பக்தா்களுக்கும், தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும், தில்லி வாழ் தமிழா்களுக்கும் பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது
எம். எஸ். விஸ்வநாதன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 54

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

தில்லி முதல்வருடன் தமிழ்ச் சங்கத்தினா் சந்திப்பு

சாகித்திய அகாதெமி விருது: எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு தில்லி தமிழ் அமைப்புகள் வாழ்த்து
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

