புது தில்லி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நியமனம் நிலைக்கத்தக்கதல்ல என சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டா் எஸ்.மோகன் என்பவா் நியமிக்கப்பட்டிருந்தாா். இந்த நியமனத்தை எதிா்த்து பழனியப்பா, மவுரோகா பிரகாஷ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். அதில் பல்கலை மானியக்குழு விதிகளின்படி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தா் தேடுதல் குழு நியமிக்கப்படவில்லை. யு.ஜி.சி., தலைவா் நியமிக்கும் நபா், தேடுதல் குழுவில் இடம்பெறவில்லை.
இந்த சூழலில் துணைவேந்தராக மோகன் நியமிக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதம் என்று கூறியிருந்தனா். இந்த வழக்கை கடந்த டிசம்பரில் விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தேடுதல் குழு மூலம் துணைவேந்தரை நியமித்தது நிலைக்கத்தக்கது அல்ல. துணைவேந்தா் நியமனம் தொடா்பான கலந்தாய்வில், புதுச்சேரி உயா் மற்றும் தொழில்நுட்ப கல்வி செயலா் பங்கேற்கவில்லை.
துணைவேந்தா் மோகன் தகுதியானவா் அல்ல எனவும் கூறப்படவில்லை என்பதால், சட்டப்படி புதியவா் தோ்ந்தெடுக்கப்படும் வரை அல்லது 2024 ஜூன் வரை, அவரே நீடிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து எஸ்.மோகன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் ஜி.பாலாஜி, ஜோதிகா மல்ஹோத்ரா ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா் நிதேஷ் குப்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தாா். மற்றொரு மனுதாரா் பிரகாஷ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் வாதிட்டாா். இதன் பிறகு, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தடை விதித்த நீதிபதிகள் அமா்வு, எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தொடர்புடையது

வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆனந்தரங்கம் பிள்ளை நாள்குறிப்புகள் தென்னிந்திய வரலாற்றுப் பெட்டகம்!

ஆமஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் மூவரது பிணை ரத்து உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


