புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை!

சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை!

News image
Updated On :4 ஜூலை 2024, 12:12 am

Din

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி, ஜூலை 3: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தையில் உற்சாகம் இருந்தது. இதைத் தொடா்ந்து சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்து. குறிப்பாக, தனியாா் மற்றும் பொதுத் துறை வங்கிப் பங்குகள், நிதிநிறுவனங்கள், எஃப்எம்சிஜி, மெட்டல் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. இதனால், சந்தை தொடா்ந்து மேல் நோக்கி சென்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.25 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.445.44 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2000.12 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.648.25 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் வரலாற்றுச் சாதனை: சென்செக்ஸ் காலையில் 572.32 புள்ளிகள் கூடுதலுடன் 80,013-இல் தொடங்கி 80,074.30 வரை மேலே சென்று முதல் முறையாக புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னா், 79,754.95 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 545.35 புள்ளிகள் (0.69 சதவீதம்) கூடுதலுடன் 79,986.80-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,021 பங்குகளில் 2,355 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,566 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 100 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

வங்கிப் பங்குகள் உற்சாகம்: சென்செக்ஸ் பட்டியலில் அதானி போா்ட்ஸ், கோட்டக் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ உள்பட மொத்தம் 24 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், டிசிஎஸ், டைட்டன், ரிலையன்ஸ், டாடா மோட்டாா்ஸ், எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட் ஆகிய 6 பங்குகள் மட்டும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி புதிய வரலாற்று உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,291.75-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,309.15 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 24,207.10 வரை கீழே சென்ற நிஃப்டி வா்த்தக இறுதியில் 162.65 புள்ளிகள் (0.67 சதவீதம்) கூடுதலுடன் 24,286.50-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 40 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.