இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (ஆக. 6) ஏற்றத்துடம் முடிந்தது. ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்ற ரிசர்வ் வங்கி அறிவிப்பால் நேற்று உயர்வுடன் முடிந்த நிலையில், இன்றும் அதன் தாக்கம் பிரதிபலித்துள்ளது.
பொதுத் துறை நிறுவனப் பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் உயர்வுடன் ஆதாயப் பட்டியலில் இருந்தன. ஐடி துறை பங்குகள், நிஃப்டி மத்திய தரப் பங்குகள் சரிவுடன் இருந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,782 புள்ளிகளுடன் தொடங்கிய நிலையில், படிப்படியாக 78,633 என்ற புள்ளி அளவுக்கு குறைந்தது.
எனினும் பிற்பகலில் தொடர்ந்து உயர்ந்து அதிகபட்சமாக 78,954.76 புள்ளிகள் வரை உயர்ந்தது. வணிக நேர முடிவில் 373 புள்ளிகள் உயர்ந்து 78,954 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று காலை 24,641 புள்ளிகளுடன் தொடங்கியது. படிப்படியாகக் குறைந்து 24,604 புள்ளிகள் வரை சென்ற நிலையில், வணிக நேர முடிவில் 11.35 புள்ளிகள் உயர்ந்து 24,636 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடனும் 11 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.
அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 3.52% உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக எஸ்பிஐ 2.85%, எடர்னல் 1.91%, டைட்டன் கம்பெனி 1.75%, சன் பார்மா 0.57%, ஐசிஐசிஐ வங்கி 0.52%, ஆக்சிஸ் வங்கி 0.17%, எல்&டி 0.12% உயர்ந்திருந்தன.
இதேபோன்று பவர் கிரிட் 3.91%, டாடா ஸ்டீல் 1.92%, டிசிஎஸ் 1.66%, பார்தி ஏர்டெல் 1.52%, இன்டர் குளோப் 1.51%, கோட்டாக் வங்கி 1.50% சரிவுடன் காணப்பட்டன.
Summary
Stock Market Close Sensex gains PSU banks shine
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 650 புள்ளிகள் ஏற்றம்; ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு!

5 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை ஏற்றம்! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்வு

ஜூன் 25: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு! ஐடி, மீடியா பங்குகள் சரிவு!
விடியோக்கள்

ஈரானுக்கு டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கை! | Donald Trump | Iran | Hormuz Strait |




