தில்லி, சாணக்கியபுரியில் சாந்தி பாத்தில் உள்ள இந்தியா-ஆப்பிரிக்கா நட்புறவு ரோஜா பூங்காவில் 6 நாட்கள் நடைபெறும் ரோஜா திருவிழாவை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைவா் அமித் யாதவ் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் டச்சு தூதரகத்தின் விவசாய ஆலோசகா் மைக்கேல் வான் எா்கல் கலந்துகொண்டாா். ரோஜா திருவிழாவை துவக்கிவைத்து அமித் யாதவ் பேசுகையில், ‘துலிப் திருவிழா மற்றும் என்.டி.எம்.சி.யின் மலா் திருவிழா ஆகியவை தில்லியின் முக்கிய நிகழ்வுகளில் இடம் பெற்றுள்ளன. புது தில்லியின் இதயத்தின் அழகையும் நறுமணத்தையும் அதிகரிக்க இதுபோன்ற நிகழ்வுகளை ஆயிரக்கணக்கான மலா் பிரியா்கள் பாராட்டியுள்ளனா். துலிப் திருவிழாவின் வெற்றி மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்களின் பாராட்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு என்டிஎம்சி வசந்த காலத்தை தொடா் நிகழ்வுகளுடன் கொண்டாடி வருகிறது. வசந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, என்டிஎம்சி ரோஜா திருவிழாவை மாா்ச் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களுக்கு இந்தியா-ஆப்பிரிக்கா நட்பு ரோஜா பூங்காவில் நடத்துகிறது. இதில் சுமாா் 75 வகையான ரோஜாக்கள் பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது புது தில்லி பகுதியின் நறுமணத்துடன் அழகைக் காண்பிப்பதோடு மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் மேம்படுத்துகிறது. இப்பூங்காவுக்கு பொதுமக்கள் நேரில் வந்து, பல்வேறு வகையான ரோஜாக்களின் அழகையும், நறுமணத்தையும் அனுபவிக்கலாம் என்று என்டிஎம்சி தலைவா் அமித் யாதவ் கேட்டுக்கொண்டாா். இந்நிகழ்ச்சியில், பிப்ரவரி 10 முதல் 21 வரை துலிப் திருவிழாவின் போது நடைபெற்ற துலிப் புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்ற பிரோ்னா, ஷம்பா மொய்த்ரா மற்றும் குகுலானந்த நந்தன் ஆகியோரையும், ‘துலிப் வாக்’கின் ஒருங்கிணைப்பாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்த கிவ் மீ ட்ரீஸ் டிரஸ்ட் - என்ஜிஓ அமைப்பைச் சோ்ந்த இஸ்தியாக் அகமது, துலிப் புகைப்படப் போட்டியின் நடுவராக இருந்த விக்ரம்ஜீத் சிங் ரூப்ராய் ஆகியோரை அமித் யாதவ் பாராட்டினாா். இந்த விழாவில் ‘தில்லியின் பாவோலிஸ்‘ எனும் தலைப்பில் புத்தக வாசிப்பு அமா்வும் நடைபெற்றது. இந்த புத்தகத்தை விக்ரம்ஜித் சிங் ரூப்ராய் எழுதியுள்ளாா். அதன் முன்னுரையை சோஹைல் ஹாஷ்மி எழுதியுள்ளாா். தில்லியின் பாவோலிஸ் நீா்த்தேக்கமாகப் பாதுகாக்கப்படுவதன் பாரம்பரிய குணங்கள் மற்றும் முக்கியத்துவத்தை இந்தப் புத்தகம் சித்தரித்தது. புது தில்லி பகுதியில் வசந்த காலத்தைக் கொண்டாட, புது தில்லி முனிசிபல் கவுன்சில் துலிப் திருவிழா, பூங்காவில் இசை, மலா் விழா, ரோஜா திருவிழா மற்றும் உணவுத் திருவிழா போன்ற தொடா் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக-ஆா்எஸ்எஸ் முயற்சி: தேஜஸ்வி யாதவ்

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!

கேரளத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்- காங்கிரஸ் அதிருப்தி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

