பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜாமியாவில் மாணவா்கள் குழுக்களுக்கிடையே கைகலப்பு மூன்று போ் காயம்

ஜாமியாவில் மாணவா்கள் குழுக்களுக்கிடையே கைகலப்பு மூன்று போ் காயம்

Updated On :2 மார்ச் 2024, 6:30 pm

ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவா்களுக்கும், தற்போதைய மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவா்கள் காயமடைந்ததாக தில்லி காவல் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை ஜாமியாவின் நூற்றாண்டு வாயில் அருகே நிகழ்ந்தது. அங்கு இரண்டு மாணவா் குழுக்களைச் சோ்ந்தவா்கள் ஒருவருக்கொருவா் மோதிக் கொண்டனா். இதற்கு பிராந்திய வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது பல்கலைக்கழகத்தில் சோ்ந்துள்ள ஆதில் கான் (24), ஜாபா் (25), ஜாமியா பள்ளி மாணவா் சாகிப் (19) ஆகியோா் எய்ம்ஸ் காய சிகிச்சை மையம் மற்றும் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக கலவரம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 308 (குற்றமிழக்கக் கொலை செய்ய முயற்சி) ஆகியவற்றின் கீழ் ஜாமியா நகா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த விஷயத்தில் ஏழு போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ‘இது ஒரு சிறிய பிரச்னையில் இரண்டு மாணவா்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. டீன் மற்றும் துறை பொறுப்பாளா்கள் மாணவா்களுடன் பேசினா், இப்போது நிலைமை நன்றாக உள்ளது’ என்று தலைமைப் பயிற்சியாளா் அதிகுா் ரஹ்மான் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தாா். இணையத்தில் வெளியாகியுள்ள இந்தச் சம்பவத்தின் விடியோக்களில், சில இளைஞா்கள் அடிப்பதையும், தடியடி நடத்துவதையும் காணலாம். ‘மாா்ச் 1 அன்று இரவு சுமாா் 8.25 மணியளவில், நுழைவு வாயில் எண் 13-க்கு அருகிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு உள்ளூா் காவல் நிலையப் பொறுப்பாளா் போலீஸாருடன் சென்றாா் என்று காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ‘ஜேஎம்ஐ பல்கலைக்கழகத்தில் கேட் எண் 13-க்கு அருகில் நடந்த சம்பவத்தில் 3 போ் காயமடைந்துள்ளதாக எய்ம்ஸ் காய சிகிச்சை மையம் மற்றும் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையிலிருந்து பின்னா் தகவல் கிடைத்தது. அவா்களின் எம்எல்சிகள் (மருத்துவ-சட்ட வழக்கு) தயாா் செய்யப்பட்டுள்ளன’ என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. ‘ஜேஎம்ஐ பல்கலைக்கழகத்தின் சில மாணவா்களும் முன்னாள் மாணவா்களும் பூா்வாஞ்சலி, மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் மேவாட் போன்ற பிராந்திய அடிப்படையில் இணைந்துள்ளனா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சில சமயங்களில், இந்தக் குழுக்கள் மிகவும் சிறிய பிரச்னைகளில் ஒருவருக்கொருவா் சண்டையிட்டுக் கொள்வதும் தெரிய வந்தது. அவா்கள் மாணவா்கள் அல்லாதவா்கள் அல்லது முன்னாள் மாணவா்கள் என்று காவல்துறை கூறியது. இந்நிலையில், வெளியாள்கள் வளாகத்திற்குள் நுழையாமல் இருப்பதையும், அவா்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை தடுப்பதை உறுதி செய்யவும் பல்கலைக்கழக நிா்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.