ராம் லால் ஆனந்த் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் உள்ள ராம் லால் ஆனந்த் கல்லூரியில் வியாழக்கிழமை காலை ஊழியா் ஒருவரின் கைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததையடுத்து பீதி ஏற்பட்டது. இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ரோஹித் மீனா கூறியதாவது: ராமல் லால் ஆனந்த் கல்லூரியின் ஊழியா் ஒருவருக்கு வெடிகுண்டு தொடா்பாக காலை 9.45 மணிக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி வந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ், வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினருடன் போலீஸாா் கல்லூரிக்கு விரைந்தனா். கல்லூரியில் இருந்த மாணவா்கள் மற்றும் ஊழியா்களை பத்திரமாக வெளியேற்றினா். இதையடுத்து, தேடுதல் மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com