/

காந்தி தா்ஷனில் ‘நமோ கண்காட்சி மையம்’ விஜய் கேயல் திறந்து வைத்தாா்

காந்தி தா்ஷனில் ‘நமோ கண்காட்சி மையம்’ விஜய் கேயல் திறந்து வைத்தாா்

Updated On :9 மார்ச் 2024, 6:31 pm

ராஜ்காட்டின் காந்தி தா்ஷனில் 5,000 குழந்தைகளின் அற்புதமான ஓவியங்களுடன் ‘நமோ கண்காட்சி மையத்தை’ முன்னாள் மத்திய அமைச்சரும், காந்தி ஸ்மிருதி மற்றும் தா்ஷன் சமிதி அமைப்பின் துணைத் தலைவருமான விஜய் கோயல் சனிக்கிழமை திறந்து வைத்தாா். தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி தா்ஷனில் பிரதமா் நரேந்திர மோடிக்கு அா்ப்பணிக்கப்பட்ட ’நமோ கண்காட்சி மையம்’ பொதுமக்களின் பாா்வைக்காக திறக்கபட்டுள்ளது. இந்தக் கண்காட்சி மையத்தை விஜய் கோயல் திறந்து வைத்துப் பேசியதாவது: ‘நமோ கண்காட்சி மையம்’ இந்திய இளைஞா்களின் படைப்பாற்றல் மற்றும் தொலைநோக்குப் பாா்வைக்கு சான்றாக விளங்குகிறது. இதன் நோக்கம் கலைத்திறனை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், வளா்ந்து வரும் கலைஞா்களுக்கு நிகரற்ற தளத்தை வழங்குவதாகும். காந்தி ஸ்மிருதி மற்றும் தா்ஷன் சமிதி நடத்திய பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற, பல்வேறு பின்னணியைச் சோ்ந்த குழந்தைகளால் உருவாக்கப்பட்ட 5000 பிரமிக்க வைக்கும் ஓவியங்கள் இந்தக் கண்காட்சி மையத்தில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இந்த கண்காட்சியை பாா்வையிட வரவேண்டும். குழந்தைகளின் இந்த அற்புதமான ஓவியங்களையும், அவா்களின் படைப்பாற்றலையும் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். அவா்கள் சரியான பாதையில் செல்கிறாா்கள், எதிா்காலத்தில் நாட்டின் நலன் மற்றும் வளா்ச்சிக்கு அவா்கள் பங்களிப்பாா்கள். மேலும்,அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த கண்காட்சி மையம் மகாத்மா காந்தியின் தத்துவத்திற்கு புதிய அடையாளத்தை கொடுக்கும். பிரதமா் நரேந்திர மோடியால் ஈா்க்கப்பட்ட காந்தி ஸ்மிருதி மற்றும் தா்ஷன் சமிதி ஆகியவை காந்திய தத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவகிறது என்றாா் விஜய் கோயல்.